Gautham menon speech: என்னை படத்தில் அடிப்பதற்கு பாரதிராஜா தயங்கினார் - கௌதம் மேனன் - tamil cinema news
🎬 Watch Now: Feature Video
Published : Aug 24, 2023, 3:45 PM IST
சென்னை: தமிழ் சினிமாவில் உணர்வுப்பூர்வமான படங்களை எடுத்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர் தங்கர் பச்சான். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன. இதில் பாரதிராஜா, கௌதம் மேனன், அதிதி பாலன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் பாரதிராஜா, கௌதம் மேனன், தங்கர் பச்சான், ஆர்வி உதயகுமார் நடிகை அதிதி பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்ளிடம் பேசிய கௌதம் மேனன் பேசும் போது “இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம் பாரதிராஜா மற்றும் தங்கர் பச்சான். இவரது படங்கள் எப்படி இருக்கும் என்று தெரியும். பாரதிராஜாவின் மகனாக நடிக்க சொன்னார்கள். எப்படி இருக்கும் என்று நினைத்து நடித்தேன். என்னை அடிக்க பாரதிராஜா தயங்கினார். எனக்கு இப்படத்தில் நடிக்க ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படத்தில் நிறைய கற்றுக்கொண்டேன் நன்றி.