Tomato: 2 கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை - அலைமோதிய மக்கள் - tn news
🎬 Watch Now: Feature Video
கடந்த சில நாட்களாக காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல் சென்று உச்சத்தை தொட்டது. இந்த நிலையில், சமையலுக்கு அத்தியாவசியப் பொருளான தக்காளியை வாங்கிப் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், வேலூர் வியாபாரி ஒருவர் இரண்டு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்தார். நேற்று இரவு குடியாத்தம் பகுதியில் வேனில் எடுத்து வரப்பட்ட தக்காளியை, இரண்டு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்ததால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் சென்றனர்
தற்பொழுது சந்தையிலும், கடைகளிலும் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து சாலையோரம் வாகனத்தில் 50 ரூபாய்க்கு தக்காளி விற்கப்பட்டதால் பொதுமக்கள் அதிகளவில் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
மேலும், ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தக்காளியை நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வருவதால், விலை குறைவாக விற்பனை செய்யவதாக தக்காளி வியாபாரி தெரிவித்தார்.