2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு பொதுமக்கள் பெருமளவில் வரவில்லை - வங்கி அதிகாரிகள் - reserve bank
🎬 Watch Now: Feature Video
தேனி: 2016ஆம் ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் சில ஆண்டுகளுக்கு முன்பு அச்சடிக்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை அனைத்து வங்கிகள் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
ஒரு நாளைக்கு ஒரு நபர் தங்கள் ஆதார் உள்ளிட்ட ஆதாரத்தைக் காண்பித்து பத்து 2000 ரூபாய் நோட்டுகள் என இருபதாயிரம் ரூபாய்களை மட்டும் மாற்ற முடியும் என்று அறிவிப்பு வெளியாகியது. இன்று முதல் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று கூறிய நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு பொது மக்கள் பெரிய அளவில் வருகை தராமல் வெறிச்சோடியே காணப்படுகிறது.
மேலும் வழக்கமான வங்கிப் பணிகள் மட்டுமே நடைபெறுவதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நடுத்தர மற்றும் சாமானிய பொதுமக்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணம் என்றும் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை இன்று முதல் வங்கிகளில் மாற்றலாம்! வழிமுறைகள் என்னென்ன?