ரேஸ் பைக் பாதுகாப்பு விழிப்புணர்வு! சாகசம் நடத்திய பைக் ரேஸ் வீரர்கள்! - awareness adventure program in Thoothukudi
🎬 Watch Now: Feature Video
Published : Sep 24, 2023, 10:13 AM IST
தூத்துக்குடி: பஜாஜ் நிறுவனம் மற்றும் சுசி ஆட்டோ லிமிடெட் நிறுவனம் சார்பில், ரேஸ் பைக்குகளை, தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் அணிந்து சாகசங்கள் செய்வது குறித்த விழிப்புணர்வு சாகச நிகழ்ச்சி நேற்று (செப்.23) தூத்துக்குடியில் நடைபெற்றது.
சமீப காலங்களில் தமிழகத்தில், இளைஞர்கள் பலர் ரேஸ் பைக்குகளில் பாதுகாப்பு கவசங்கள் அணியாமல் பல்வேறு சாகசங்களை செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு பாதுகாப்பின்றி செய்யும் சாகசம் காரணமாக பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ரேஸ் பைக்குகளின் சாகசங்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பஜாஜ் நிறுவனம் மற்றும் சுசி ஆட்டோ லிமிடெட் நிறுவனம் சார்பில், ரேஸ் பைக்குகளை எவ்வாறு பாதுகாப்பாக தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் அணிந்து சாகசங்கள் செய்வது குறித்த விழிப்புணர்வு சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பைக் சாகச வீரர்கள் கலந்து கொண்டு, பாதுகாப்பு கவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்து பல்வேறு விதமான பைக் சாகசங்களை செய்து காண்பித்தனர். மேலும், பைக் சாகச விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாகசங்களை கண்டு களித்தனர்.