பழனியில் தானாக நகன்ற ஆட்டோ.. வைரலாகும் வீடியோ
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று (மே 30) காலை முதலே கடுமையான வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் திடீரென பெய்த மழையின் காரணமாக பழனி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களான ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பால சமுத்திரம் மற்றும் கீரனூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால் நெய்க்காரப்பட்டியில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ ஒன்று பலத்த காற்றில் தானாக நகர்ந்து சென்றது. அப்போது, ஆட்டோ பலத்த காற்றில் சாலையின் குறுக்கே சென்று இரு சக்கர வாகனத்தை மோதி விட்டு சென்று உள்ளது. இதனால் ஆட்டோவின் உரிமையாளர் வாகனத்தின் பின்னே ஓடுவதும் சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
இந்த நிகழ்வின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. மேலும், சாலையில் வேறு எந்த வாகனங்களும் குறுக்கே வராததால் நல்வாய்ப்பாக எந்த விபத்தும் ஏற்படவில்லை.