அரசு பள்ளிக்குள் புகுந்து அட்டூழியம்: மதுபோதையில் புத்தங்களை எரித்த இளைஞர் கைது! - மது போதை
🎬 Watch Now: Feature Video
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த குமணந்தாங்கல் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து பள்ளியில் வைக்கப்பட்டு இருந்த புத்தகங்கள், வருகை பதிவேடு உள்ளிட்டவைகளை தீயிட்டு கொளுத்தியுள்ளார்.
மேலும், பள்ளியில் உள்ள மின்சாரம் பயன்பாடு கணக்கெடுக்கும் இயந்திரம் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன்(30) என்பவர் மதுபோதையில் இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர் இதே பகுதியில் அடிக்கடி மதுபோதையில் பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது, பொதுமக்களுக்கு இடையூறு தருவது உள்ளிட்ட செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதால் அவரது மனைவி இவரை பிரிந்து தன் குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.