Video: திருவள்ளூர் ஸ்ரீ மகாலஷ்மி மகாகணபதி கோயில் கும்பாபிஷேக விழா! - Kumbabhishekam Festival
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15587105-thumbnail-3x2-af.jpg)
திருவள்ளூர்: ஒன்றியத்திற்குட்பட்ட புன்னப்பாக்கம் ஜே.ஜே. நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலஷ்மி மகா கணபதி கோயிலில் கும்பாபிஷேக விழாவானது கடந்த 13ஆம் தேதி பந்தக்கால் நடப்பட்டு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, வாஸ்து ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடத்தப்பட்டு பின்னர் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர், புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டு வேத விற்பன்னர்கள் மூலம் மந்திரங்கள் ஓதப்பட்டு கோயில் உச்சியில் அமைந்துள்ள ராஜகோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புன்னப்பாக்கம், ஈக்காடுகண்டிகை, ராமதண்டலம் உள்ளிட்டப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST