alumni silver jubilee:video:ஞாபகம் வருதே - முன்னாள் மாணவர்கள் 25ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு - Vellore Latest News
🎬 Watch Now: Feature Video
alumni silver jubilee:வேலூர்: தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 1995-98ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து 25-ஆண்டுகள் ஆன நிலையில் கலாசார திருவிழா என்ற பெயரில் ஒன்றிணைந்து 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவினை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
இந்த விழாவில், முன்னாள் மாணவர்களின் குடும்பத்தினர், குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னாள் மாணவர்கள் பழங்கால நினைவுகளை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் பயின்ற வகுப்பு அறைகளுக்கு சென்று அவர்கள் அமர்ந்த இடத்தில் அமர்ந்தும் வகுப்பு போர்டுகளை தடவி பார்த்தும் பொக்கிஷமான பழைய நினைவுகளை தங்களது குடும்பத்தினர்களுக்கு தெரியப்படுத்தினர்.
இந்த விழாவில், பல்வேறு துறைகளில் பணியாற்றியும் ஓய்வுபெற்றவர்களும் என 150க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு கல்லூரிக்குத் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்த நிலையில், கூடுதல் வகுப்பறைகள் கட்ட ரூ.2 லட்சம் காசோலையும் வழங்கினர்.