வேலூரில் அகில இந்திய அளவில் நடந்த கராத்தே போட்டி.. 2000 வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு.. - ஏசி சண்முகம்
🎬 Watch Now: Feature Video
Published : Jan 7, 2024, 11:08 PM IST
வேலூர்: வேலூரில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து பங்கேற்றனர்.
வேலூர் மாவட்டத்தில், ஜப்பான் ஷுட்டோ ராய் கராத்தே பள்ளியின் சார்பில் கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இதில், இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்துகொண்டனர்.
மேலும், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் என 4 பிரிவுகளாகப் போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளை இந்தியத் தலைமை மாஸ்டர் ரமேஷ் துவங்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு ஏ.சி.எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.சி.சண்முகம் கோப்பைகளையும் சான்றுகளையும் வழங்கினார்.
இதுமட்டும் அல்லாது, இந்த கராத்தே போட்டி விழாவில் சின்னதிரை நடிகை அனு கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் தங்களின் முழுமையான திறமைகளையும் வெளிப்படுத்தினர். மேலும், இதில் திரளான பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு போட்டியினை கண்டுகளித்தனர்.