26 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரருக்கு தேனியில் உற்சாக வரவேற்பு ! - 26 ஆண்டுகள் ராணுவ பணி
🎬 Watch Now: Feature Video
தேனி: மாவட்டம் கூடலூரை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் இந்திய ராணுவப்படையில் சுமார் 26 ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு கடைசியாக அஸ்ஸாமில் பூடான் எல்லையில் மேஜராக பணிபுரிந்துள்ளார் இந்நிலையில் இன்று பணி ஓய்வு பெற்று தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் கூடலூருக்கு வருகை தந்தார்.
சுமார் கால் நூற்றாண்டுகள் இந்திய ராணுவ பணியில் பணியாற்றிய ரஜினிகாந்த்க்கு முன்னாள் ராணுவத்தினர் வீரமங்கை நலச்சங்கத்தினர் ரஜினிகாந்தின் உறவினர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து, மேள தாளம் முழக்கத்துடன் ஓய்வு பெற்ற வீரரை வரவேற்று ,மாலை அணிவித்து மரியாதை செய்து கௌரவப்படுத்தினர்.
மேலும் கூடலூரில் அரசமர தெருவிலிருந்து ஊர்வலமாக ரஜினிகாந்த் சொந்தம் இல்லம் வரை முன்னாள் ராணுவத்தினர் மற்றும் உறவினர்கள் என அனைவரும் அழைத்து வந்து ஆரத்தி எடுத்து பெருமையுடன் வீட்டுக்குள் அனுமதித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் வீரமங்கை நலச் சங்கத்தின் தலைவர் பவுன் மற்றும் செயலாளர் சிவ பாண்டியன் ஆகியோர் 26 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் ரஜினிகாந்த் அவர்கள் செய்த பணியினை பொதுமக்களிடையே எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : எந்த காரணத்தைக் கொண்டும் மேகதாதுவில் அணைகட்ட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது - அமைச்சர் துரைமுருகன்