ஆடி வெள்ளி: பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரசுவாமி கோயிலில் தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு! - thanjavur news in tamil
🎬 Watch Now: Feature Video
தஞ்சை: கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில் புகழ் பெற்ற துர்கை ஸ்தலமாக விளங்கும், ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயில் உள்ளது. அன்னை பராசக்தி தவம் செய்ததும், காமதேனுவின் மகள் பட்டி பூஜித்து முக்தி பெற்ற தலமும், விஸ்வாமித்திரருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கப்பெற்றதும் என பெருமை வாய்ந்த ஸ்தலமாக, இத்தலம் விளங்குகிறது.
திருஞான சம்பந்தருக்கு முத்துப்பந்தல் அமைத்து அதன் கீழ் நடந்து வரும் அழகை காண ஈசன், நந்தியை சற்று விலகி இருக்க கட்டளையிட்ட ஸ்தலம் என சிறப்பு பெற்ற ஸ்தலம் என்றே கூறலாம். கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயில், பிரசித்தி பெற்ற துர்கை ஸ்தலமாக விளங்குகிறது.
இங்குள்ள துர்கையம்மன் வடக்கு முகம் நோக்கி மகிஷன் தலை மீது நின்ற கோலத்தில் எட்டு கரங்களுடன் விஷ்ணு துர்க்கையாகவும், லட்சுமி துர்க்கையாகவும் காட்சி தருகிறார். மேலும் வேண்டுவோர்க்கு வேண்டியதை அருளும் அன்னையாக அருள்பாலிக்கிறார்.
ராகு பகவானுக்கு அதிதேவதையாக துர்க்கையம்மன் விளங்குவதால் எலுமிச்சை பழ விளக்கேற்றியும், நெய் விளக்கேற்றியும் மக்கள் வழிபடுகின்றனர். ராகு கால நேரத்தில் வழிபடுவதால் இது ராகு தோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற துர்க்கை ஸ்தலத்தில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் முத்துப்பந்தல் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆடி முதல் வெள்ளிக்கிழமையான இன்று அதிகாலை முதல், அதிகாலை முதல் ஏராளமானோர் தீபங்கள் ஏற்றியும் அர்ச்சனைகள் செய்தும் தரிசனம் செய்து வருகின்றனர்.