ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் - thanjavur news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-08-2023/640-480-19229801-thumbnail-16x9-tj.jpg)
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி கிருத்திகை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஆடி கிருத்திகை முன்னிட்டு நேற்று(ஆகஸ்ட் 9ஆம் தேதி) அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு மஞ்சள், பால், சந்தனம், திருநீறு உள்ளிட்ட திரவியங்களால் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து தங்க கவசம், வைரவேல் ஆகியவற்றுடன் அருள் பாலித்த மூலவரை நீண்ட வரிசையில் வந்து ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து நேற்றிரவு சுவாமி திருவீதி உலாவும் அதனை அடுத்து கோயில் நேத்தர புஷ்கரணியில் பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தெப்பத்திற்கு சுவாமி எழுந்தருள, தெப்போற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தெப்பத்தில் உலா வந்த சுவாமியை தரிசனம் செய்து மகிழ்ந்தனர். இதே போல் ஆடி கிருத்திகை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: Aadi Krithigai: சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை கோலாகலம்!