தாம்பரம் அருகே கடனுக்கு சிகரெட் கேட்டு டீக்கடை ஊழியர் மீது பயங்கர தாக்குதல் - to pay for cigarettes

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 23, 2023, 9:16 PM IST

செங்கல்பட்டு: தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் காமராஜர் நகர் பெருமாள் கோவில் அருகே டீக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு அஜித் என்ற இளைஞர் மதுப்போதையில் டீ கடைக்குச் சென்று கடனுக்கு சிகரெட் கேட்டுள்ளார். அப்போது கடை ஊழியர் தர மறுத்ததால் அவருக்கும் கடை ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து அங்கிருந்து சென்ற அந்த இளைஞர் மீண்டும் இன்று (ஏப்.23) கையில் ஒரு உருட்டுக் கட்டையுடன் கடைக்கு வந்து கடையில் இருந்த ஊழியரை பயங்கரமாக தாக்கினார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அஜித்தை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இவ்வாறு கடனுக்கு சிகரெட் கேட்டு கொடுக்க மறுத்ததால் தாக்குதல் நடந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சியின் அடிப்படையில் பீர்க்கன்காரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து, தாம்பரம் பெருங்களத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமூக விரோதிகள் வியாபாரிகளை தாக்கும் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. எனவே, இதுபோன்ற குற்ற சம்பங்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு வியாபாரிகள் கோரிக்கை எடுத்துள்ளனர். தற்போது இந்த டீக்கடை ஊழியரை தாக்கியதன் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.