டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற தமிழக மாணவன்.. திருவள்ளூரில் உற்சாக வரவேற்பு! - Asian Champions League
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர்: திருவள்ளுரை சேர்ந்தவர் கிருபாகரன். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் லோக பிரதீப். இவர் யு.கே.ஜி முதல் டேக்வாண்டோ கற்று வருகிறார். டேக்வாண்டோ(கொரிய தற்காப்புக் கலை). கடந்த சில தினங்களுக்கு முன்பு நாசிக்கில் நடைபெற்ற இந்திய டேக்வாண்டோ கேடட் பூம்சே தேர்வு சோதனையில் பங்கேற்று தேர்வானார்.
ஹர்ஷினி என்ற சிறுமி ஜூனியர் பெண் தனிநபர் பூம்சே பிரிவில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் பெற்று அணிக்காக காத்திருப்பில் இருந்தார். இவரது பயிற்சியாளர் டாக்டர் அசோக் குமார் லிங்கா. இவர் முன்னாள் இந்திய விமானப்படை வீரர். இவர் டேக்வாண்டோவில் 35 வருட அனுபவங்களை உடையவர். இவர் 5வது டான் பிளாக் பெல்ட், குக்கிவான் மாஸ்டர், பூம்சேய் போன்ற பிரிவுகளில் தேசிய பதக்கம் வென்றவர்.
மேலும், இவர் சர்வதேச ATU பயிற்சியாளர் மற்றும் பிரைட் நேஷன் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சியாளர் அசோக் குமார் லிங்கா அளித்த பயிற்சியின் மூலம் சிறுவன் லோக பிரதீப் டேக்வாண்டோவில் மாநில மற்றும் தேசிய அளவில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
நாசிக்கில் நடைபெற்ற டேக்வாண்டோவில் கலந்து கொண்ட சிறுவன் லோக பிரதீப், திறம்பட செயல்பட்டு தங்கப் பதக்கத்தை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தார். தங்கம் வென்று சொந்த ஊரான திருவள்ளூர் திரும்பிய சிறுவன் லோக பிரதீப்பை அவரது பயிற்சியாளர் மற்றும் திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். வரும் செப்டம்பர் மாதம் ஆசியன் சாம்பியன் லீக் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கிறார். இதனால் அவர்களுக்கு பயிற்சிக்கான நிதியுதவி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.