தந்தை சடலம் முன்பு காதலியை கரம் பிடித்த இளைஞர்.. அப்பாவின் கடைசி ஆசை என்பதால் கொட்டும் மழையில் திருமணம்! - அவரது சடலம் முன்பு திருமணம் செய்த
🎬 Watch Now: Feature Video
கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அய்யம்மாள். இவரின் கணவர் ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் நேற்று (மார்ச்.20) உயிரிழந்தார். இந்த நிலையில், இவர்களது மகன் பிரவீன் என்பவருக்கு வரும் 27-ஆம் தேதியன்று திருமணம் நடைபெற இருந்தது.
இதற்கிடையில் உடல் நலக்குறைவால் ராஜேந்திரன் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, உயிரிழந்த ராஜேந்திரனின் மகன் பிரவீனை திருமணம் செய்து கொள்ள நிச்சயிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த சொர்ணமால்யா தனது குடும்பத்துடன் இந்த துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்போது, தனது தந்தையின் ஆசீர்வாதத்துடன் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சொர்ணமால்யாவிடம் பிரவீன் கூறியுள்ளார்.இதனை ஏற்றுக்கொண்ட சொர்ணமால்யா, திருமண கோலத்தில் தோன்றி உயிரிழந்த ராஜேந்திரனின் கடைசி ஆசைப்படி திருமணம் செய்துகொண்டனர்.
இது தொடர்பாக பேசிய இளைஞர் பிரவீன், "எனது தந்தையின் கடைசியை நிறைவேற்றவும், அவரது ஆசீர்வாதத்துடன் திருமணம் நடக்க வேண்டுமென விரும்பினேன். தந்தையின் சடலம் முன்பு மணக்கோலத்தில் எனது தாயார் முன்னிலையில், திருமணம் செய்துக்கொண்டேன். என் மனைவி சொர்ணமால்யாவுக்கு நன்றி" என்று கண்ணீர் மல்க கூறினார்.
தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற அவரது சடலத்தின் முன்பு திருமணம் செய்துக்கொண்ட மகனின் பாசத்தை கண்டு நெகிழ்ந்த உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர். சோகத்திலும் ஒரு பாசப் போராட்டம் என்று இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த பலரும் பிரவீன் - சொர்ணமால்யா தம்பதிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.