இந்தியாவில் 6 லட்சம் செவிலியர்கள் பற்றாக்குறை: காரணம் என்ன?
🎬 Watch Now: Feature Video
வேலூர்: பாகாயத்தில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் செவிலியர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா, கல்லூரியின் முதல்வர் வத்சலா சதன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் துணை இயக்குநர் ஜாய் மாமன், கண்காணிப்பாளர் ஆலீஸ் சோனி உள்ளிட்டோர் மற்றும் திரளான மாணவர்களும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக மத்திய குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறையின் ஆலோசகர் டாக்டர் தீபிகா ஷிசில் கலந்து கொண்டு 209 செவிலியர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் விழாவில் மத்திய குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறையின் ஆலோசகர் டாக்டர் தீபிகா ஷிசில் பேசுகையில், "செவிலியர்கள் படித்துவிட்டு அயல்நாட்டிற்கு விரும்பி செல்கின்றனர். இந்த காரணத்தினாலேயே நமது இந்திய நாட்டில் செவிலியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் சுமார் 6 லட்சம் செவிலியர்கள் தற்போது பற்றாக்குறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் நோய்களில் கரோனா முக்கிய பங்காற்றியது. அது சுகாதாரத்துறையில் பல மாற்றங்களையும் புதிய கட்டமைப்புகளையும் கொண்டு வந்தது. செவிலியர்கள் ராணுவ வீரர்களை போல் கரோனா காலத்தில் உயிர்களை பணயம் வைத்து சேவை செய்தனர். ஆகையால் நீங்களும் நமது நாட்டிலேயே சேவையாற்றிட வேண்டும்" என தெரிவித்தார்.