Coonoor Leopard Attack: சிறுத்தை தாக்கியதில் ஒருவர் காயம்..! நூலிழையில் உயிர் பிழைத்தார்! - today latest news
🎬 Watch Now: Feature Video
Published : Sep 28, 2023, 2:07 PM IST
நீலகிரி: குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் வசித்து வரும் புண்ணியமூர்த்தி, கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் (செப் 26) இரவு நேரத்தில் வீட்டில் இருந்த பொழுது வீட்டின் வெளியே நாய் குரைக்கும் சத்தம் கேட்டு கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்துள்ளார்.
அப்பொழுது சிறுத்தை ஒன்று புண்ணியமூர்த்தியைத் தாக்க முயன்றுள்ளது. உடனே சுதாரித்துக் கொண்ட புண்ணியமூர்த்தி வீட்டின் உள்ளே ஓட முயன்றார். அப்போது சிறுத்தை தாக்கியதில் புண்ணியமூர்த்தியின் வலது கையில் ஆழமான காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குன்னூர் அரசு மருத்துவமனைக்குச் சென்ற புண்ணியமூர்த்தி முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
சமீப காலமாக குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம் காணப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதுவரை குடியிருப்பு பகுதிகளில் விலங்குகள் மற்றும் நாய்களை வேட்டையாடி வந்த சிறுத்தை தற்போது முதல் முறையாக மனிதரைத் தாக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சிறுத்தை தாக்கியது குறித்து குன்னூர் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.