குடிதண்ணீருக்காக நிலத்தை தானம் வழங்கிய குன்னூர் வள்ளல்! - குடிநீர் பிரச்னை
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்டம், குன்னூர் எடப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட எம குண்டு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதி வனத்தையொட்டி உள்ள கிராமம் என்பதால் 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று குடிநீரை சுமந்து வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக இந்தப் பகுதியில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில் எடப்பள்ளி பகுதியில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் காளிதாசிடம் சென்று தங்களது குறையை பொதுமக்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்த திமுக பொதுக்குழு உறுப்பினர் நீர்வரத்துள்ள 1/2 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி தானமாக பொதுமக்களுக்கு வழங்கி உள்ளார்.
இந்தச் செயல் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலத்தில் எடப்பள்ளி ஊராட்சி தலைவர் விரைவில் 10 லட்ச ரூபாய் செலவில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், குடிநீர் கிணறு உள்ளிட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுக்குழு உறுப்பினர் காளிதாஸ், நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் தெரிவிக்கையில், தனது கிராமத்தில் உள்ள மக்களுக்கு நீண்ட காலமாக உள்ள குடிநீர் பிரச்னையை போக்கும் வகையில், தனது சொந்த நிலத்தை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தானமாக வழங்கியது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும்; இதுபோல மக்கள் பணிகள் செய்ய கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வழிப்பறி கொள்ளையர்களுக்கு திருட ஸ்கெட்ச் போட்டு கொடுத்த காவலர் கைது..! ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்..