தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் - எம தீர்த்தம்
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த திருவண்ணாமலை சாலையில் 17-வது கி.மீ. தொலைவில் மலைமீது அமைந்து உள்ளது, தீர்த்தமலை திர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தல விநாயகர் சித்தி விநாயகர் ஆவார்.
இந்த கோவில் வருடத்திற்கு ஒரு முறை மலையின் உச்சியில் இருந்து விழும் தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்வது வழக்கம். இன்று ஆனி மாத சனிக்கிழமை மற்றும் அமாவாசையினை ஒட்டி, தருமபுரி மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சார்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தங்களில் நீராடி வழிபாடு செய்தனர்.
இத்திருக்கோவில் மலைக்கு மேற்கே ராமன் தீர்த்தம், வாயு தீர்த்தம், வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கே இந்திர தீர்த்தம் உள்ளது.வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது. தெற்கே எம தீர்த்தம் உள்ளது. இப்படியாக தீர்த்தங்களால் சூழப்பெற்ற அற்புத மலை தீர்த்தமலை என்பது குறிப்பிடத்தக்கது. இத்திருத்தலம் காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
இதையும் படிங்க:நாளைய வாக்காளர்களே... புதிய தலைவர்கள் வருகிறார்கள் - நடிகர் விஜய் பேச்சு