thumbnail

By

Published : Jul 15, 2023, 7:17 PM IST

ETV Bharat / Videos

Coimbatore Accident: அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சி!

கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் சாலை வேடப்பட்டி அருகே அதிவேகமாக வந்த காரும் அரசு பேருந்தும், நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் அவ்வழியே சென்ற பழ வியாபாரி மற்றும் காரை ஓட்டி வந்த இளைஞர் ஆகியோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் பகுதியில் இருந்து டவுன்ஹால் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பெரியகுளம் பகுதியை சேர்ந்த முருகவேல் என்பவர் பேருந்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது வேடப்பட்டி அருகே பேருந்து வேகமாக வந்துள்ளது.

அதே நேரத்தில் எதிர் திசையில் கோவையிலிருந்து மாதம்பட்டி நோக்கி கார் ஒன்று அதி வேகமாக வந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் கார் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது. பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை நிறுத்த முயன்ற போது எதிர்பாராத விதமாக அவ்வழியே சென்ற பழ வியாபாரி சுப்பிரமணி என்பவர் மீது மோதியது.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும், காரை ஓட்டி வந்த மாதம்பட்டியை அடுத்த தேனமநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கோபி சங்கர் என்பவர் படுகாயம் அடைந்தார் அவரையும் பழ வியாபாரி சுப்பிரமணியையும் மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

விபத்து குறித்து வடவள்ளி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.