தேனி வீரபாண்டி கோயில் திருவிழா கொண்டாட்டத்தில் மோதல் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி - வீரபாண்டி கோயில்
🎬 Watch Now: Feature Video
தேனி : ஸ்ரீ வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த மே 9 ஆம் தேதி தொடங்கி வரும் 16 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. தற்போது கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருவிழாவிற்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி கௌமாரி அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் இங்கு அமைந்துள்ள ராட்டினம், சர்க்கஸ் உள்ளிட்டவைகளை கண்டு ரசித்து வருகின்றனர். அவ்வாறு நேற்று மாலை தேர் திருவிழாவின் போது வீரபாண்டி ஊருக்கு அருகாமையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் இங்கு உள்ள ராட்டினத்தில் ஏறுவதற்கு டிக்கெட் எடுத்து முயற்சித்த போது, அவர்கள் உடன் வந்த பெண்ணை ராட்டினத்தில் வேலை பார்க்கும் ஊழியர் கேலி செய்ததாக தெரிகிறது.
இது குறித்து பெண்ணின் உடன் வந்த உறவினர்கள் ராட்டின பணியில் ஈடுபட்டவரிடம் எப்படி பெண்ணை கேலி செய்யலாம் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அது மிகப்பெரிய தகராறாக மாறியது. இதில் அங்கு அமைந்துள்ள அனைத்து ராட்டின உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து அப்பெண்ணின் உறவினரிடம் பெரும் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, ஒருவருக்கொருவர் அங்கு கிடைத்த கட்டைகள், சேர் உள்ளிட்டவற்றைக் கொண்டு தாக்கிக் கொண்டனர்.
இந்த காட்சிகள் தற்போது தேனி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து வீரபாண்டி காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: Ooty Rose Show: 18-வது ரோஜா கண்காட்சி... கண்களுக்கு விருந்தளித்த வண்ண ரோஜாக்கள்!