ஒரு கையில் சிலம்பம்; மறுகையில் நீச்சல் என அசத்திய கோவை சிறுவனுக்கு கிடைத்த அங்கீகாரம் - coimbatore district news

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 11, 2023, 9:11 PM IST

கோயம்பத்தூர்: தொடர்ந்து இரண்டு மணி நேரம் நீரில் சிலம்பம் சுழற்றி கோவையைச் சேர்ந்த சிறுவன் சாதனை புரிந்துள்ளார். கோவை சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் சந்தான ராஜா- ராஜேஸ்வரி தம்பதியினர். இவர்களது மகன் ராஜமுனீஸ்வர்(11). தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கடந்த சில வருடங்களாகவே கோவையில் உள்ள வி.ஆர்.சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளைப் பயின்று வருகிறார். 

இந்நிலையில், அவருக்கு நீச்சலிலும் ஆர்வம் உள்ளதை அறிந்து கொண்ட பயிற்சியாளர் திலீப் குமார் Splash Swimming Academy-யுடன் இணைந்து அவருக்கு நீச்சல் பயிற்சியும் அளித்து, புதுவித சாதனையைப் படைத்தனர். அதாவது நீரில் சிலம்பம் சுழற்றுவதற்குப் பயிற்சி கொடுத்துள்ளார். 

பயிற்சிகளை முறையாக கற்றுக் கொண்ட மாணவர் ராஜமுனீஸ்வர் இன்று இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக நீச்சல் குளத்தில் ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பங்களைச் சுழற்றி சாதனைப் புரிந்துள்ளார். அதிலும் பல்வேறு விதமான நீச்சல் யுத்திகளை கையாண்டு சாதனையை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சாதனையை Nobel World Record Achiever புத்தகம் அங்கீகரித்துள்ளது. சாதனைப் புரிந்த மாணவருக்கு சிலம்ப பயிற்சியாளர் திலீப் குமார், நீச்சல் பயிற்சியாளர்கள் சிவராஜகோபாலன் உள்ளிட்ட நண்பர்கள், உறவினர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: உதகையில் படகுப் போட்டி - வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.