குழந்தையின் பிறந்தநாள் விழாவில் 13 மோதிரம், கேமரா உள்ளிட்டப் பொருட்கள் கொள்ளை - crime news

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 1, 2023, 5:49 PM IST

திருப்பத்தூர்: குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் - இளவேனில் தம்பதியினரின் பெண் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் விழாவை தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு கொண்டாடியுள்ளனர்.

அப்போது திருமண மண்டபத்தில் குழந்தைக்குப் பரிசாக வழங்கப்பட்ட 13 மோதிரம், 5 சவரன் தங்க நகை, 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்ட 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமரா உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 

இது தொடர்பாக அஜித்குமார் ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருமண மண்டபத்தில் இருந்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.