நீலகிரியில் முகாமிட்டுள்ள 9 காட்டுயானைகள்... பொதுமக்கள் அச்சம்... - தமிழ்நாட்டில் காட்டு யானைகள் உயிரிழப்பு
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்டம் குன்னூர் கரிமொரா கிராமப்பகுதியில் 9 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கடந்த வாரம் நீலகிரிக்கு வந்தன. இதையடுத்து கல்லார், பர்லியார், ரன்னிமேடு பகுதிகளில் முகாமிட்டிருந்த நிலையில், இன்று (ஏப்.4) கரிமொரா கிராமத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் சுற்றிவருகின்றன. இந்த யானைகள் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST