Video: 2ஆவது திருமணம் செய்த கணவரை வெளுத்து வாங்கிய முதல் மனைவி! - சிவநாராயணன் காவல் நிலையம்
🎬 Watch Now: Feature Video
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம், ஜான்ஜ்கிர் சம்பாபலோடா பஜாரைச் சேர்ந்த சோம் பிரகாஷ் என்பவர் கோயில் ஒன்றில் இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். அப்போது, அங்கு வந்த அவரின் முதல் மனைவி மற்றும் அவரின் உறவினர்கள் ஆகியோர் திருமணகோலத்தில் இருந்த சோம் பிரகாஷை அடித்து துவம்சம் செய்தனர். சண்டை முற்றிய நிலையில், இரு தரப்பினரும் சிவநாராயணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். முன்னதாக, முதலாவதாக திருமணம் செய்த பெண்ணிடம், அவரின் கணவரும் மாமியாரும் திருமணமான ஒரே மாதத்தில் ரூ. 2 லட்சம் வரதட்சணையும் பைக்கும் கேட்டு கொடுமை செய்ததில் அப்பெண் அவரது பிறந்த வீட்டுக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விவகாரம் குறித்து அறிந்த காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST