அமெரிக்காவில் மன்னிப்புகேட்ட பிரதமர் நரேந்திர மோடி - எதற்காகத் தெரியுமா? - பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்
🎬 Watch Now: Feature Video
ஹூஸ்டனில் நடைபெற்ற 'ஹவுடி மோடி!' நிகழ்ச்சியில், அமெரிக்காவின் மூத்த அரசியில்வாதிகளில் ஒருவரும், செனட் சபை எம்பியுமான ஜான் கார்னை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
அப்போது, ஜானின் மனைவிக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, "அன்பிற்குரிய உங்களது கணவர் என்னுடன் நேரம் செலவழிப்பதைப் பார்த்து, உங்களுக்கு பொறாமையாக இருக்கலாம். என்னை மன்னித்து விடுங்கள்" என நையாண்டியாக கூறினார். இந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.