CCTV காட்சி: திருநெல்வேலியில் முகமூடி அணிந்து ஆடு திருட்டு - Goat theft
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே கோவிலம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. பலசரக்கு கடை நடத்தி வரும் இவர் தனது குல தெய்வத்திற்கு காணிக்கை செலுத்துவதற்காக கடந்த 3 ஆண்டுகளாக கிடா ஆடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த ஆடு சுமார் 30 கிலோ எடை வரை இருக்கும். இந்த நிலையில் நேற்று (மார்ச். 16) அதிகாலை 2 மணியளவில் முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அந்த ஆட்டை திருடிச்சென்றுவிட்டனர். இந்த காட்சிகள் அவரது வீட்டின் முன்பு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை வைத்து களக்காடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST