ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணம்! - வைரல் வீடியோ
🎬 Watch Now: Feature Video
செங்கல்பட்டு: வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் வேன் ஒன்றில் தொங்கியபடியும், வேனின் பின்பக்க ஏணியில் நின்றபடியும், பள்ளி மாணவர்கள் பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் இத்தகைய ஆபத்தான, சாகசப் பயணங்களைத் தடுக்க, காவல் துறையினரும், பள்ளி நிர்வாகங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், இவ்வாறு மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.