Exclusive: ஒரு வாரமாக உணவு கிடைக்கவில்லை - உயிரிழந்த மாணவனின் நண்பன் - உக்ரைனில் உணவு கிடைக்கவில்லை
🎬 Watch Now: Feature Video
ரஷ்யப்படை நேற்று (மார்ச்.1) கார்கீவ் நகரில் நடத்தியத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த கர்நாடக மாநில மருத்துவ மாணவன் நவீன் சேகரப்பா ஞானகவுடா உயிரிழந்தார். இந்நிலையில், உக்ரைனில் உள்ள நவீனின் நண்பர் லவ்கேஷுடன் ஈடிவி பாரத் செய்தியாளர் உரையாடல் மேற்கொண்டார். அப்போது கூறுகையில், "உக்ரைனில் நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இந்திய மாணவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. ஒரு வார காலமாக உணவு கிடைக்கவில்லை. நவீன் உணவு வாங்க வெளியே சென்றபோது தாக்குதலில் உயிரிந்தார். இந்தப் பகுதியைவிட்டு எங்களால் வெளியேற முடியவில்லை. இந்திய அரசு விரைவில் எங்களை மீட்க வேண்டும்" என வேண்டுகோள்விடுத்தார். லவ்கேஷ் பஞ்சாப் மாநிலத்தின் மவுர் மண்டியைச் சேர்ந்தவர். உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்றுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST