Video:மணிமுத்தாறு அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப்பயணிகள் குளிக்கத்தடை! - Western Ghats near Ambai Nellai district
🎬 Watch Now: Feature Video
நெல்லை: அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்திபெற்ற மணிமுத்தாறு அருவி உள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர். இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் நெல்லை, தென்காசி உள்பட சில மாவட்டங்களில் கன மழைக்கான ரெட் அலெர்ட் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்து இருந்தது. அதன்படி மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை, ஊத்து உள்ளிட்ட மலைப்பிரதேசப்பகுதியில் பனி மூட்டம் சூழ்ந்து தொடர் சாரல் மழை பெய்து வந்த நிலையில், மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புக்கருதி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST