குண்டம் விழாவையொட்டி ஆட்டுச் சந்தைகளில் மக்கள் கூட்டம் - Erode News
🎬 Watch Now: Feature Video
சத்தியமங்கலம் பகுதியில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியதை அடுத்து, புன்செய் புளியம்பட்டி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை சுறுசுறுப்பாக நடைபெற்றது. வாரச் சந்தைக்கு வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் என 1500 ஆடுகள் வந்தன. கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆட்டின் விலை ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 10 கிலோ வரையிலான வெள்ளாட்டு கிடாய் ரூ.5,500 வரை விற்பனையானது. அதே எடை கொண்ட வெள்ளாடு ரூ.6,500 வரை விற்பனையானது. இந்த வாரம் நடைபெற்ற ஆடு விற்பனையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான ஆடுகள் விற்பனையானது.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST