சூறாவளிக்காற்றால் வாழை மரங்கள் நாசம் - விவசாயிகள் வேதனை - வருவாய் துறையினர் மற்றும் தோட்டக்கலைத் துறையினர்
🎬 Watch Now: Feature Video
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் கரிதொட்டம்பாளையம் கிராமத்தில் விவசாயிகள் பயிரிட்டிருந்த நேந்திரன், கதலி, ஜி9 உள்ளிட்ட அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.