"வாழ்வதைவிட சாவதே மேல் என்று நினைக்கிறோம்”: தெருக்கூத்து கலைஞர் உருக்கம் - pandemic affecting Theatre artists
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர்: கிராமிய தெருக்கூத்து நாடக கலைஞர்கள் சங்கம் பொன்னியம்மன் நாடக அமைப்பிலிருந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று (ஏப்.12) கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், பொதுமுடக்கத்தினால் தடைப்பட்டிருந்த நாடக நிகழ்வுகள் தற்போதுவரை மீளவில்லை.
திரைப்படங்களுக்கு 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் சூழலில் நாடகக் நிகழ்வுகளுக்கும் 50 சதவீத அடிப்படையில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு குறைந்தது பத்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.