கோரிக்கையை ஏற்ற கமல் ஹாசன் - பொதுமக்கள் ஆரவாரம்! - கமல் பிரசாரம்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் காமராஜபுரம் பகுதியிலுள்ள பொதுமக்களிடையே சில தினங்களுக்கு முன்பு ஜூம் செயலி வாயிலாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கருத்துகளைக் கேட்டிருந்தார். அப்போது மக்கள் அவர்களது குறைகளைத் தெரிவித்திருந்தனர். அதில் ரம்யா என்ற கர்ப்பிணி டைரியில் கையொப்பம் வேண்டும், லலிதா என்ற பெண் தனது மகன் கொலைக்கு நீதி வேண்டும் என்பதுபோல பல கோரிக்கைகளை வைத்திருந்தனர். இதில் கமல் ஹாசன் தனது பரப்புரையின்போது டைரியில் கையொப்பம் கேட்ட பெண்மணிக்கு அதை நிறைவேற்றித் தந்தார். மேலும், மகன் கொலைக்கு நீதி கேட்ட தாய்க்கும், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவித்தார். இதனை வரவேற்று கமல் ஹாசனை சுற்றிப் பயனடைந்தவர்கள் அனைவரும் ஆர்ப்பரித்து நின்றனர்.