என் வழி; தனி வழி... சீண்டாத: காளையை வம்பிழுத்த மூதாட்டிக்கு நேர்ந்த கதி! - மூதாட்டிக்கு நேர்ந்த கதி
🎬 Watch Now: Feature Video
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள கேரி கிராமத்தில் வசித்து வந்த 80 வயதுடைய மூதாட்டி சாலை அருகே அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாக சாலையில் சுற்றித்திரிந்த காளை ஒன்று மூதாட்டி அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே வீட்டின் முகப்பு பகுதிக்குள் நுழைய முயன்றது. இதனை பார்த்த மூதாட்டி, தன் கையில் வைத்திருந்த தடியால் காளையை தாக்கினார். இதில் கடுப்பான காளை, மூதாட்டியை சுழற்றி தூக்கி எறிந்தது. படுகாயமடைந்த மூதாட்டி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.