யானையின் காலுக்கு அடியில் சிக்கிய நபர் - பதைபதைக்க வைக்கும் வீடியோ! - elephant attack at surla
🎬 Watch Now: Feature Video
ஆந்திரா - ஒடிசா எல்லையில் அமைந்துள்ள சுர்லா கிராமத்தில் யானைகள் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக வயல்களில் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. யானைகள் கூட்டமாக அலைவதால் கிராம மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனிடையே, அப்பகுதியில் இருந்த ஒருவரை யானை கால்களால் மிதித்து காயப்படுத்தும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இதனை அங்கிருந்தவர்கள் தங்களின் செல்போனில் எடுத்து பதிவிட்டுள்ளனர். காயமடைந்த நபர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.