பம்பரமாக சூழலும் பாட்டி: காணொலி வைரல்! - பாட்டி சிலம்பம் சுற்றும் வீடியோ
🎬 Watch Now: Feature Video
மகாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியைச் சேர்ந்தவர் சாந்தாபாய் பவார்(85), தனது வயிற்றுப் பிழைப்புக்காக தெருக்களில் சிலம்பம் சுற்றி வித்தைக் காட்டிவருகிறார்.
இது குறித்து பாட்டி சாந்தாபாய் கூறுகையில், “லத்தி கத்தி எனப்படும் கம்பு சுற்றும் இந்த வித்தையை என் தந்தையிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். என்னுடைய எட்டு வயதிலிருந்து லத்தி கத்தி செய்துவருகிறேன்” என்றார்.
கடவுள் அருளால், இந்த வயதிலும் தன்னால் இந்த வித்தையை செய்ய முடிவதாகவும், இதன்மூலம் என் வாழ்வாதாரத்திற்கு தேவையான பணம் சம்பாதிக்க முடிவதாகவும் மகிழ்ச்சியை நம்முடன் பகிர்கிறார் பாட்டி சாந்தாபாய்.