புற்றுநோயாளிகளின் வலிபோக்கும் தலைமுடி தானம்! - hair for cancer patients
🎬 Watch Now: Feature Video
மாறிவரும் சுற்றுச்சூழல், சுகாதாரமற்ற உணவு, வாழ்க்கை முறையில் மாற்றம், மரபணு கோளாறு என பல்வேறு காரணங்களால் அனைத்து வயதினருக்கும் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது. பொதுவாக புற்றுநோயாளிகளுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தச் சிகிச்சையின்போது, ஏற்படும் பக்க விளைவுகளில் முக்கியமான ஒன்று தலைமுடி உதிர்த்தல். இதனால் புற்றுநோயாளிகள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். ராஜஸ்தானில் உள்ள தன்னார்வ அமைப்பு, பொதுமக்களிடம் இருந்து தலைமுடிகளை தானமாக பெற்று, அதனை புற்று நோயாளிகளுக்கு வழங்கி வருகிறது. இது குறித்த செய்தித்தொகுப்பை பார்க்கலாம்.