புதுச்சேரியில் பேனர்கள் வைத்துக்கொள்ள அனுமதி! - பேனர்கள் வைத்துக்கொள்ள அனுமதி
🎬 Watch Now: Feature Video
புதுச்சேரி டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள் பங்கேற்ற உள்ளாட்சித் துறை ஏற்பாடு செய்த ஆலோசனைக்கூட்டம் உள்ளாட்சித் துறை அலுவலகத்தில் இயக்குனர் மலர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் கூறுகையில், பேனர் அச்சடிப்பதற்கு முன் அனுமதி பெறவேண்டும். மேலும், கல்யாண மண்டபம் உள்பகுதியில் பத்துக்கு பத்து அளவில் மட்டுமே இரண்டு பேனர்கள் வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படும். பொது இடங்களில் பேனர் வைக்க அனுமதி இல்லை. அரசு சார்பில் பேனர் வைக்க இடம் தேர்வு செய்யப்படும் என்று தெரிவித்தார்.