'தமிழ்நாட்டு தளபதி' என கோஷம்; ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்த விஜய் ரசிகர்கள் - தமிழ்நாட்டு தளபதி என கோஷம்
🎬 Watch Now: Feature Video
தேனி: அஜித், விஜய் ஆகிய இருவரின் நடிப்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜன.11) ஒரே நாளில் வெளியான 'துணிவு' - 'வாரிசு' ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனிடையே, விஜய்யின் 'வாரிசு' படத்தைக் காண பெரியகுளத்திலுள்ள பவளம் திரையரங்கில் குவிந்த ரசிகர்கள், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 'தமிழ்நாடு' என்பதைவிட 'தமிழகம்' என்பதுதன் சரியானதாக இருக்குமென ஆளுநர் பேசியது சர்ச்சையாகிய நிலையில், 'தமிழ்நாட்டு தளபதி' என ஆளுநருக்கு தங்களது எதிர்ப்பைக் காட்டும் விதமாக கோஷமிட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST