சர்வதேச அறைகலன் பூங்காவில் கனிமொழி எம்பி ஆய்வு - தூத்துக்குடி செய்திகள்
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: இந்தியாவிலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு (International Furniture Park) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 07.03.2022 அன்று அடிக்கல் நாட்டினார்.
இங்கு பர்னிச்சர் தொழில் சார்ந்த உதிரி பாகங்களை தயார் செய்யும் சிறு, குறு தொழில் நிறுவனங்களும் இடம்பெற உள்ளது. இதனை, திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று (பிப். 12) நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், ஆகியோர் உடனிருந்தனர்.