சென்னை: சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தமிழக மாணவி கடந்த 23ஆம் தேதி பல்கலை வளாகத்திலேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் (37) என்பவரை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் சம்பவத்தின்போது மாணவி எதிர்கொண்ட துயரங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த சம்பவத்தின்போது அக்கியூஸ்டட் ஞானசேகரனுக்கு வந்த போன் கால் யாரிடம் இருந்து வந்தது? இதன் பின்னணியில் யாரெல்லாம் உள்ளனர்? ஞானசேகரனுக்கு பிறகு கைது பட்டாளம் நீளுமா போன்ற கேள்விகள் வலுவாக எழுகின்றன.
முதல் தகவல் அறிக்கை
''கடந்த 23ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரவு 7.45 மணிக்கு S&H என்னும் கட்டிடத்திற்கு பின்புறம் நானும் எனது ஆண் நண்பரும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு மறைந்திருந்த நபர் எங்கள் அருகில் வந்து, நீங்கள் பேசிக் கொண்டிருந்ததை நான் வீடியோ எடுத்துவிட்டேன். இந்த வீடியோவை விடுதி ஊழியர்களிடமும், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களிடம் காண்பித்து உங்களுக்கு டிசி தர வைப்பேன்.. கல்லூரியில் இருந்து உங்களை நீக்கி விடுவேன் என மிரட்டினான். இதற்கு நானும் என் ஆண் நண்பரும் அந்த நபரிடம் மன்னிப்பு கேட்டோம். பின்னர் அவன் நான் சொல்வதை கேட்டால் உங்களை காப்பாற்றுவேன் என்றான்.
மேலும் என் ஆண் நண்பரை அந்த நபர் தனியாக அழைத்து மிரட்டி அங்கிருந்து விரட்டினார். பின்னர் என்னிடம் வந்து உன் ஆண் நண்பரை பல்கலைக்கழக ஊழியர்கள் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். நீ என்னுடன் வா உன்னை காப்பாற்றுகிறேன் எனக் கூறி அழைத்துச் சென்றான். அப்போது EEE டிபார்ட்மெண்ட் வழியாக பின்பக்கம் கூட்டிச்சென்று அங்கு உள்ள நெடுஞ்சாலை ஆய்வக கட்டட சந்திப்பில் இருட்டான இடத்தில் நிறுத்தி என்னை மிரட்டினான். அப்போது மீண்டும் அவனிடம் நான் மன்னிப்பு கேட்டேன்.
மூன்று ஆப்ஷன்
அதற்கு அவன் எனக்கு மூன்று சாய்ஸ் கொடுத்தான். ஒன்று, நான் எனது ஆண் நண்பருடன் இருந்த வீடியோவை பெற்றோரிடமும், கல்லூரி முதல்வரிடமும் காட்டி எனக்கு டிசி கொடுக்க வைப்பது. இரண்டாவது, நான் அவனுடன் கொஞ்ச நேரம் இருக்க வேண்டும். மூன்றாவது, அந்த சாருடன் கொஞ்ச நேரம் இருக்க வேண்டும் என்றான்.
மாதவிடாய் என்று கூறினேன்
நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன். அப்போது அவன் கோபமடைந்து என்னைத் தொட ஆரம்பித்தான்.. என் மேலாடையை கழட்ட சொன்னான்.. அதற்கு நான் இறுக்கமாக இருக்கு கழட்ட முடியாது எனக் கூறினேன். அதன் பின் என்னை அவன் கட்டாயம் செய்து என் மேல் ஆடை மற்றும் உள்ளாடையை கழட்டினான். பின்பு அவன் என் பேண்டை கழட்ட முயன்றான். அதற்கு நான் எனக்கு மாதவிடாய் என்று கூறினேன். பின்பு என் அங்கங்களை தொட்டு பாலியல் அத்துமீறல் செய்தான்.
இதையடுத்து நான் மன்னிப்பு கேட்டும் அவன் என்னை ஓரல் செக்ஷுவலில் ஈடுபட வைத்தான். அதனை வீடியோவாக எடுத்து என்னை மிரட்டி, என் செல்போனில் இருந்து எனது தந்தை தொலைபேசி எண்ணை எடுத்துக்கொண்டு, நான் கூப்பிடும் போதெல்லாம் நீ வரவேண்டும் என கூறி, என்னுடைய கல்லூரி ஐடி கார்டை புகைப்படம் எடுத்துக் கொண்டான். பின்பு போகும்போது உன்னை நான் இரண்டு நாட்களில் கூப்பிடுவேன் என்று கூறினான். அதற்கு நான் நாளை ஊருக்கு சென்று விடுவேன் ஜனவரி 20ஆம் தேதி தான் வருவேன் என கூறினேன்.
அடையாளம் காட்டுவேன்
அதன் பிறகு அவன் என்னை பல்கலைகழக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் பக்கத்தில் விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டான். பின்பு நான் என் விடுதிக்கு சென்று விட்டேன். அந்த நபரை மீண்டும் பார்த்தால் நான் அடையாளம் காட்டுவேன். நான் பார்க்கும்போது அவன் கருப்பு நிற சட்டை, சாம்பல் நிற ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற தொப்பியை அணிந்திருந்தான். என்னிடம் தவறாக நடந்து கொண்ட அவனை பார்த்தால் அடையாளம் காட்டக் கூடிய அந்த நபரை கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்று முதல் தகவல் அறிக்கையில் மாணவி கொடுத்த புகார் விவரிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் 63(a),64(1), 75 (1) (ii) (iii) BNS ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
யார் அந்த சார்
ஒருவர் மட்டும் தான் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட நிலையில், முதல் தகவல் அறிக்கையில் அந்த பெண்ணை ஞானசேகர் மிரட்டி கொண்டிருந்த போது அவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நபர் யார்? அவரிடம் ஏன் மாணவியை மிரட்டிக் கொண்டிருக்கிறேன் என கூறினார்? ஞானசேகர் கொடுத்த ஆப்ஷனில் 'சார்' என்று அவர் யாரை குறிப்பிட்டார்? ஒரு தனி நபர் இரண்டு பேரை மிரட்டி பல்கலை வளாகத்திலேயே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது சாத்தியமா? அந்த சமயத்தில் மாணவி ஏன் சத்தம்போட்டு தன்னை காப்பாற்றிக்க முயலவில்லை போன்ற ஆழமான கேள்விகள் எழுந்துள்ளது.