ETV Bharat / state

டங்ஸ்டன் விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விவசாயிகள் - ஜனவரி 7-ல் போராட்டம் அறிவிப்பு! - TUNGSTEN ISSUE

டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல‌ அறிவிப்பை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி, ஜனவரி 7ம் தேதி ஒரு லட்சம் பேருடன் பேரணியாகச் சென்று, மதுரை தலைமை அஞ்சல் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கான வரைபடம், விவசாய சங்க கூட்டம்
டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கான வரைபடம், விவசாய சங்க கூட்டம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2024, 12:39 PM IST

மதுரை: மேலூர் அருகே டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல‌ அறிவிப்பை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி, ஒரு லட்சம் பேருடன் ஜனவரி 7ஆம் தேதி 12 கிலோமீட்டர் தூரம் பேரணியாக சென்று, மதுரை தலைமை அஞ்சல் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி, புலிப்பட்டி, வல்லாளபட்டி, மாங்குளம், கிடாரிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வேதந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிட் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூர் பகுதி மக்கள் தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக்கோரி வலியுறுத்தியும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மத்திய அரசு டங்ஸ்டன் தற்காலிகமாக ஏல அறிவிப்பை ஒத்திவைப்பதுடன் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டியை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் கனிம சுரங்கம் அமைக்க மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது.

மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டத்தின் ஒரு பகுதி
மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டத்தின் ஒரு பகுதி (ETV Bharat Tamil Nadu)

அதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் ரவி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், டங்ஸ்டன் கனிம சுரங்க மத்திய அரசின் தற்போதைய அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம்: மத்திய அரசின் ஏல அறிவிப்புக்கு ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

அதாவது, 'அரிட்டாபட்டி தவிர்த்து மற்ற கிராமங்களில் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும், முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன வாய்க்கால்கள் முழுமையாக சேதப்படுத்தப்படும் என்பதாலும், வெள்ளலூர், உறங்கான்பட்டி கோட்டநத்தம்பட்டி உள்ளிட்ட கடைமடை பகுதிக்கு செல்லக்கூடிய தண்ணீர் முழுமையாக தடைபட்டு மேலூர் பகுதி விவசாயம் கேள்விக்குறியாக்கப்படும் என்பதாலும் இந்த டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை மத்திய அரசு இப்பகுதியில் செயல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி ஏலம் முற்றிலும் ரத்து செய்யப்படும் வரை தங்களது போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளனர்.

அதன்படி மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் வரும் ஜனவரி மாதம் 7ஆம் தேதி மேலூர் அருகே உள்ள நரசிங்கம்பட்டி பெருமாள் மலையிலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி நடைபயணமாக சென்று மதுரை தல்லாகுளம் தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். ஜனவரி 7ஆம் தேதி நடைபெறக்கூடிய அந்த போராட்டத்திற்கு மேலூர் வர்த்தக சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளதால், அன்றைய தினம் மேலூரில் கடை அடைப்பு நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.