வால்பாறை அருகே சலையில் காட்டு யானைகள் நடமாட்டம்...வாகன ஓட்டிகள் அச்சம் - Tea plantation workers quarters
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: வால்பாறை அருகே அடர்ந்த வனப் பகுதியில் ஒன்பது காட்டு யானைகள் சாலையை கடந்து சென்றதை, அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் படம் பிடித்துள்ளனர். வால்பாறை வன சரகத்திற்கு உட்பட்ட முருகன் எஸ்டேட், கெஜமுடி, பண்ணிமேடு, தாயமுடி உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளது. இரவு நேரங்களில் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்புகள், ரேஷன் கடைகளை சேதப்படுத்தி வருகிறது. இதனால், அப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் காட்டு யானையை வனப்பகுதிகளுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST