'சார்தாம் யாத்திரை' பக்தர்கள் கவலை: கேதார்நாத்தில் பனிப்பொழிவு, மழை! - உத்தரகாண்ட் மாநிலம் சார்தாம் யாத்திரை
🎬 Watch Now: Feature Video
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நான்கு புனித தலங்களுக்கு (கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி) பயணம் மேற்கொள்வது 'சார்தாம் யாத்திரை' ஆகும். கடும் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் குளிர்காலத்தில் கோயில்கள் மூடப்பட்டு கோடைகாலத்தில் பக்தர்கள் வருகைக்காக திறக்கப்படும். கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் நேற்று திறக்கப்பட்டன. நாளை கேதார்நாத் கோயில் திறக்கப்பட உள்ள நிலையில் அங்கு பனி மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் போர்வை உள்ளிட்டவற்றை எடுத்து வர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. கேதார்நாத்திற்கு நாள்தோறும் 12ஆயிரம் பக்தர்கள் வருகைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பத்ரிநாத் கோயில் வரும் மே 8ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST