வாரிசு பட கொண்டாட்டத்தில் பலூன் வெடித்து தீ விபத்து! - varisu fans celebration at evp cinemas
🎬 Watch Now: Feature Video
சென்னை பூந்தமல்லி அருகே ஈவிபி சினிமா திரையரங்கில் அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் படங்கள் ஒரே சமயத்தில் நேற்று (ஜன.11) வெளியானதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் போது அருகில் இருந்த ஹீலியம் பலூன் மீது அதன் நெருப்பு விழுந்ததில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST