சென்னை எண்ணெய் நிறுவன குடோனில் தீ விபத்து - தீயணைப்புத்துறை
🎬 Watch Now: Feature Video
சென்னை: புதுவண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் எண்ணெய் நிறுவனத்தின் குடோனில் இன்று (மார்ச் 27) அதிகாலை 4 மணி அளவில் மின்கசிவு காரணமாக அங்கிருந்த அட்டைப் பெட்டிகளில் வீடு தீப்பற்றியது. மேலும், தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. அங்கு விரைந்த திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட தீயணைப்புத்துறையினர் 5க்கும் மேற்பட்ட வண்டிகளுடன் சென்று சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். குடோனில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் டின்கள், அட்டைப் பெட்டிகள் மட்டும் தீயில் கருகியதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST