Video:பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.3½ கோடி வசூல் - பழனி முருகன் கோவிலில் தரிசனம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16771408-thumbnail-3x2-dgl-palani.jpg)
திண்டுக்கல்: உலகப்புகழ் பெற்ற அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருவிழாக் காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவர். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோயில் உண்டியலில் செலுத்துகின்றனர். அதன்படி கடந்த 26ஆம் தேதி மற்றும் 27ஆம் தேதிகளில் பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் அலுவலர்கள், பழனி பகுதி வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ, மாணவிகள் என 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். அதன்படி 2 நாட்கள் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின் மூலம் மொத்தம் ரூ.3 கோடியே 49 லட்சத்து 4 ஆயிரத்து 605 வருவாயாக கிடைத்தது. தங்கம் 1,323 கிராம்; வெள்ளி 25,047 கிராம்; வெளிநாட்டு கரன்சி 884-ம் கிடைத்தது.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST