கிணற்றில் தஞ்சமடைந்த 7 அடி முதலை: வனத்துறையினர் மீட்பு - கிணற்றுக்குள் முதலை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14850714-thumbnail-3x2-croc.jpg)
பகலாகோட் மாவட்டத்தைச் சேர்ந்த குலஹல்லி என்ற கிராமத்தில் உள்ள கிணறு ஒன்றில் 7 அடி நீளமுள்ள முதலை வனத்துறையினர் மற்றும் மீனவர்களால் மீட்கப்பட்டது. அருகே கிருஷ்ணா நதி உள்ளதால் அங்கிருந்து உணவு தேடி இங்கு வந்திருக்கலாம் என்று அந்த ஊர் மக்கள் தெரிவித்தனர். கடந்த நான்கு நாள்களாக இந்த முதலை அந்தப் பகுதியில் சுற்றி திரிந்ததால் பீதியடைந்த மக்கள், இந்தச் சம்பவத்திற்கு பிறகு நிம்மதியடைந்தனர். மேலும், அந்தப் பகுதியில் முதலைகளின் தொல்லைகள் அதிகரித்து வருவதால் வனத்துறையினரை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும் படி அந்த ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST