ETV Bharat / sukhibhava

Super Foods: ஜங்க் ஃபுட்ஸை விடுங்க, சூப்பர் ஃபுட்ஸை சேருங்க...!

நமது அன்றாட உணவுகளில் சில சூப்பர் ஃபுட்ஸை சேர்த்தால் அது சுவையானதாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

superfoods
ஜங்க்
author img

By

Published : Jun 18, 2023, 4:05 PM IST

டெல்லி: தற்போதைய காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் ஜங்க் ஃபுட்ஸ்(Junk Foods)-ன் ஆதிக்கம்தான். உடல் உழைப்பு குறைந்து பல்வேறு நோய்கள் வந்தபோதும், அதிகளவு சர்க்கரையும், கொழுப்பும் நிறைந்த ஜங்க் ஃபுட்ஸை நம்மால் தவிர்க்க முடியாத சூழலே இருக்கிறது. அதேநேரம், சிலர் இந்த ஜங்க் ஃபுட்ஸை தவிர்த்துவிட்டு, உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ளவும் முயற்சி செய்கிறார்கள். ஆனால், அவர்கள் தங்களுக்கு விருப்பமான சில உணவுகளை தவிர்க்கிறார்கள். அதேபோல் டயட் என்ற பெயரில் சுவையில்லாத உணவுகளை சாப்பிட வேண்டியுள்ளது.

இது போன்ற சூழ்நிலையில், ஜங்க் ஃபுட்ஸ்-க்கு மாற்றாக, உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் சுவையான மற்றும் புதுமையான உணவுகள் கிடைத்தால் எப்படி இருக்கும்? - ஆம், சூப்பர் ஃபுட்ஸ்(Super foods) மூலம் நம் அன்றாட உணவுகளை சத்தானதாகவும், சுவாரசியமாகவும் மாற்றலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சிறுதானியங்கள், சியா விதைகள் போன்ற சூப்பர் ஃபுட்ஸ் நமது உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்றும் என்றும் கூறுகிறார்கள். தினசரி உணவுகளை சூப்பர் ஃபுட்ஸ் மூலம் ஆரோக்கியமானதாகவும், சுவையானதாகவும் மாற்றும் சில வழிகளைப் பார்க்கலாம்...

டைஜெஸ்டிவ் ரொட்டி(Digestive Rotis): இந்தியாவில் பிரதானமான உணவுகளில் ஒன்றான சப்பாத்தி அல்லது ரொட்டி ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்களும் இதை உண்பார்கள். இந்த ரொட்டிகளை சமைக்கும்போது, வழக்கமான கோதுமை மாவுக்கு பதிலாக ராகி, தினை உள்ளிட்ட சிறுதானிய மாவுகளைப் பயன்படுத்தலாம். இது குடலின் ஆரோக்கியத்தையும், செரிமானத்தையும் மேம்படுத்தும்.

ஸ்பெஷல் சிச்சடி: நம் அன்றாட உணவுகளில் ஒன்றான கிச்சடி, சத்தான காய்கறிகள் சேர்த்து சமைக்கப்படுகிறது. இதனை மேம்படுத்த, தண்டுக்கீரை விதைகள்(Amaranth seeds), குயினோவா(Quinoa) போன்ற சூப்பர் ஃபுட்ஸை சேர்த்து சமைக்கலாம். இது முழுமையான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவாக இருக்கும்.

மாற்று கார்போஹைட்ரேட்டுகள் (Alternative Carbs): கார்போஹைட்ரேட்டுகள் நமது உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். உடலின் செயல்பாடுகளுக்கு கார்போஹைட்ரேட் மிகவும் முக்கியமானது. நம் ஆரோக்கியத்திற்காக அரிசி, கோதுமை போன்ற வழக்கமான கார்போஹைட்ரேட்டுகளுக்குப் பதிலாக சிறுதானியங்களைப் பயன்படுத்தலாம். தினை போன்ற சிறுதானியங்கள் கார்போஹைட்ரேட்டுகளுக்கு சரியான மாற்றாக இருக்கும். இதில் நார்ச்சத்துகள் உள்ளன.

மைண்ட்ஃபுல் டீ (The Mindful Tea): வழக்கமான தேனீரில் சியா விதைகளை சேர்த்து குடிக்கலாம். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி-ஆக்சிடண்ட்ஸ்(Antioxidants), நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்த சியா விதைகள் உடலை வலுவாக்கும்.

மேம்படுத்தப்பட்ட பால்: வழக்கமாக நாம் குடிக்கும் பாலுக்கு பதிலாக ஊட்டச்சத்துகள் நிறைந்த சிறுதானிய பாலைக் (Millet milk) குடிக்கலாம். வைட்டமின்கள், தாதுக்கள் என பல்வேறு ஊட்டச்சத்துகள் அடங்கிய இந்த பால், ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியாக வைக்க உதவுகிறது. மேலும், அதன் இயற்கையான இனிப்பு சுவை நம் சுவை அரும்புகளையும் மகிழ்விக்கும்.

இதையும் படிங்க: இணையத்தை கலக்கும் Shy Girl workout: அப்படியென்ன சிறப்பு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.